Our Feeds


Wednesday, February 25, 2026

SHAHNI RAMEES

தேர்தல் நடத்தப்பட்டால், எமது ஒற்றுமையின் பலத்தை; பார்க்க முடியும்!



ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாடொன்றுக்கு

வந்துள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்த கூட்டணிலேயே நாம் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவோம். மாகாணசபைத் தேர்தலிலிருந்தே எமது ஒருமித்த பயணம் ஆரம்பமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.


கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளோம். மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். தேர்தல் நடத்தப்பட்டால் எமது ஒற்றுமையின் பலத்தை; பார்க்க முடியும். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்த கூட்டணிலேயே நாம் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவோம். மாகாணசபைத் தேர்தலிலிருந்தே எமது ஒருமித்த பயணம் ஆரம்பமாகும்.


ஆனால் இந்த அரசாங்கம் திட்டமிட்டு மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் மத்திய வங்கி பிணைமுறி மோசடியே பாரிய மோசடி எனக் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது 9 கப்பல்களில் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு மத்திய வங்கி பிணை முறி மோசடியை விட பன்மடங்கு மோசடி இடம்பெற்றிருக்கிறது. அமைச்சர்களும் அதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »