இதன்படி, அரநாயக்கவின் அம்பலகந்த, தோதல்தோய மற்றும் கந்துன ஆகிய பகுதிகளுக்கு இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
அரநாயக்க நகரில் இருந்து தோதல்தோய வரை செல்லும் பிரதான வீதியின் காபட் (Carpet) இடுகை, அம்பலகந்த பகுதியில் நேற்று நடுவே மிகவும் அபாயகரமான முறையில் வெடித்துத் தாழிறங்கியுள்ளதாக அத தெரண கமெராவில் பதிவாகியிருந்தது.
கடந்த நாட்களில் மண்சரிவு ஏற்பட்ட இந்த இடத்தில் உள்ள பிரதான கால்வாயின் மதகு (Culvert) முறையாகப் புனரமைக்கப்படாத காரணத்தினால், பிரதான வீதியின் ஊடாக நீர் பாய்ந்துச் சென்றதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தோதல்தோய கிராமத்திற்கு வாகனங்களில் பிரவேசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், மாற்று வீதியான புவக்வத்த வீதியும் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையால் தடைப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரநாயக்க பகுதியில் 'டித்வா' புயலுக்கு முன்னர் ஏற்பட்ட பயங்கர மண்சரிவில் 13 உயிர்கள் பலியானதுடன், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாகச் சேதமடைந்தன.
மேலும் சுமார் 500 வீடுகள் கடும் அபாய நிலைக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
