Our Feeds


Monday, February 23, 2026

Zameera

நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவிருந்த சிறப்பு உரை நிகழ்வுகள் ரத்து




 தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பினைத் தொடர்ந்து, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவிருந்த சிறப்பு உரை நிகழ்வுகளை ஒக்ஸ்போர்ட் யூனியன் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் (Cambridge Union) ஆகிய இரண்டும் ரத்து செய்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷ, இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பதால், அவர் ஒரு சர்ச்சைக்குரிய நபராகப் பார்க்கப்படுகிறார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »