Our Feeds


Tuesday, February 24, 2026

Zameera

எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் எனத் தெரியவில்லை - டொனால்ட் ட்ரம்ப்


 "நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் எனத் தெரியவில்லை. எனக்காகத் துப்பாக்கியுடன் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா?" என்று நகைச்சுவையாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



அமெரிக்காவின் புளோரிடாவில் ஜனாதிபதி ட்ரம்ப் உடைய இல்லத்திற்குள் கடந்த 22ஆம் திகதி அதிகாலை 1:30 மணியளவில் இளைஞர் ஒருவன் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேனுடன் நுழைய முயன்ற சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாடும்போதே ட்ரம்ப் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



"ஆபிரகாம் லிங்கன், கென்னடி போன்ற மிகப்பெரிய செல்வாக்குள்ள தலைவர்களையே இதுபோல இலக்கு வைப்பார்கள். ஒருவேளை நான் கொஞ்சம் குறைவான செல்வாக்குள்ள தலைவராக இருந்திருக்கலாமோ என்னவோ? கொஞ்ச காலம் ஒரு சாதாரண ஜகாதிபதியாக இருக்க முயற்சிப்போம்" என்றும் அவர் கிண்டலாகப் பேசியுள்ளார்.



கொல்லப்பட்ட இளைஞன், சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருந்தது அவனது குறுஞ்செய்திகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



ட்ரம்ப் மீது ஏற்கனவே இரண்டு முறை கொலை முயற்சிகள் நடந்துள்ள நிலையில், இந்த மூன்றாவது முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »