Our Feeds


Tuesday, February 24, 2026

SHAHNI RAMEES

எதிர்க்கட்சித் தலைவரே! வேண்டாம்! - அமைச்சர் லால் காந்த அறிவுரை


 

அரசாங்கத்துக்கு பாடம் கற்பிப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு

கொழும்பில் நடந்த பௌத்த சங்க சம்மேளனம் தோல்வியடைந்துள்ளது. ஒருசில பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் கிடையாது என விவசாயம், நீர்பாசனத்துறை மற்றும் காணி அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.


கொழும்பில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


அரசாங்கத்துக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் இன்று ஒன்றிணைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என தேர்தல் காலத்தில் முரண்பட்டுக் கொண்டிருந்த சகல தரப்பினரும் இன்று நண்பர்களாக கைகோர்த்துள்ளார்கள்.


கடந்த கால ஊழல் மோசடிகள் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக  உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போது அச்சமடைந்துள்ளவர்கள் இன்று அரசாங்கத்துக்கு எதிராக கைகோர்த்துள்ளார்கள்.


அரசாங்கத்துக்கு பாடம் கற்பிப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு கொழும்பில் நடந்த பௌத்த சங்க சம்மேளனம் தோல்வியடைந்துள்ளது. ஒருசில பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் கிடையாது.எதற்காக இந்த மாநாட்டை அவர்கள் நடத்தினார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது, அதில் கலந்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவருக்கும் தெரியாது.


அரசாங்கத்தக்கு எதிராக எங்கு போராட்டம், மாநாடுகள் நடக்கிறது. அங்குச் சென்று அமர்ந்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் தான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளார். குறுகிய அரசியல் இலாபத்துக்காக தவறான செயற்பாடுகளுக்கு துணைசெல்ல வேண்டாம் என்று எதிர்;க்கட்சித் தலைவரிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »