![]() |
மஹியங்கனை, மெதஓயா பகுதியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின் கம்பியில் சிக்கி நேற்று (19) நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
விவசாய நடவடிக்கைகளுக்காக தனது வயலில் இருந்தபோது, அந்தப் பகுதி முழுவதும் இழுக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத கம்பியில் சிக்குண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விலங்குகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க இந்த சட்டவிரோத மின் கம்பி அமைக்கப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கம்பியை பொருத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
