Our Feeds


Thursday, February 19, 2026

Zameera

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர குமார


 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதன்கிழமை (18) புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.


செயற்கை நுண்ணறிவின் தாக்கங்கள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியாவுக்குச் சென்றுள்ள  நிலையிலேயே  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. 


இந்த மாநாட்டில் ஜனாதிபதி இன்றைய தினம் உரையாற்ற உள்ளார்.


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க, இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கடந்த 17 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். 


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்தின் நன்மைக்காகப் பொறுப்புடன் பயன்படுத்தும் நோக்கில், அரச தலைவர்கள் மற்றும் உலகின் தொழில்நுட்பத் துறையின் பிரதானிகளின் பங்கேற்புடன் புதுடெல்லியில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. 


ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »