Our Feeds


Thursday, February 19, 2026

Zameera

குறைந்தபட்ச மின்கட்டணம் அதிகரிக்கும்


 புதிய வலுசக்தி கொள்கையை அறிமுகப்படுத்துவதன் ஊடாகக் குறைந்தபட்ச மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார். 

நுரைச்சோலை மின்நிலையத்திற்காகத் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையினால் ஏற்பட்டுள்ள நட்டத்தையும் மக்களே சுமக்க நேரிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். 

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார். 

இதேவேளை, நிலக்கரி மோசடிக்குப் பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மின்சாரப் பாவனையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அத்துல குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »