Our Feeds


Thursday, February 26, 2026

SHAHNI RAMEES

அல்குர்ஆன் மீளாய்வு குழு அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்! - பேருவளை ஹில்மி

 



அல்குர்ஆன் மீளாய்வு குழு அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்

.

சவுதி அரேபியாவால் இலங்கை முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட, அதாவது தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்குர்ஆன் பிரதிகளுக்கு சுமார் இரண்டு வருடம் அண்மித்து நிற்கின்றது.


இஸ்லாமிய புத்தகங்களை  மீளாய்வு செய்ய வேண்டும் என்ற குண்டு வெடிப்பு விசாரணை குழு முன்வைத்த யோசனையை,  முஸ்லிம் சமூகத்தில் பல முக்கியஸ்தர்கள் எதிர்த்த நிலையில், இதன் முன் பின் விளைவுகளை சிந்திக்க முன், சிலர் இதை தங்களுக்கு ஒரு சாதகமாக பயன்படுத்த முந்திக் கொண்ட நிலையே இந்த அல்குர்ஆன் பிரச்சினைக்கு முதல் காரணமாகும்.


தங்களின் மனசாட்சிக்கு எதிராக, மனமுரண்டாக வழங்கப்பட்ட ஒரு அறிக்கையே குர்ஆன் சம்பந்தமான அறிக்கையாகும். இதில் கையப்பமிட்டு வழங்கியவர்களின் மனசாட்சியை தொட்டு கேட்டால், தாம் செய்தது பிழை என அவர்களின் மனச்சாட்சியே உறுத்தும்.


உலகில் அனைத்து ஆய்வாளர்களும் அல்குர்ஆனின் பின்னணியில் ஒரு super pover உள்ளது. இது ஒரு அற்புதமானது, இது மனித சக்திக்கு அப்பால் உள்ள ஒரு சக்தியிடம் இருந்து வந்துள்ளது. இது புனிதமானது, இது மனித குலத்திற்கு வழிகாட்டுகின்றது எனக் கூறும் போது,

அல்குர்ஆனில் மனித குலத்துக்கு எதிரான, முற்போக்கு வாதம் ( අන්දවාද අදහස් )உள்ளது,  என பழி சுமத்திய உலகின் முதலாவது ஆய்வுக் குழு இலங்கையில் அமைக்கப்பட்ட  இந்த ஆய்வுகுழுவாகும்.


அதாவது ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு அல்குர்ஆனில்,  முற்போக்கு வாதம்  (අන්දවාද අදහස් ) உள்ளது என விரல் நீட்ட முடியாத காரணத்தினால், "25000 அரபு மொழியிலான குர்ஆன்களில் மாத்திரம் தான் முற்போக்கு வாதம் இல்லை"   ( අන්දවාද අදහස්   ) இல்லை என அறிக்கை கொடுத்தார்கள் இந்த ஆய்வுக் குழுவினர் .  


இதன் மறு அர்த்தம் என்ன ?

அதாவது ஏனைய குர்ஆன் பிரதிகளில் முற்போக்கு வாதம் உள்ளது என்பதா ?

அவ்வாறானால்,  அவ்வாறு அடங்கியுள்ள   முற்போக்குவாத கருத்துக்கள் என்ன என்பதை இவர்கள் தெளிவாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு அவர்களால் குறிப்பிட முடியாது.


இவர்களின் அறிக்கையை ஆராய்ந்து பார்க்கும் பொழுது ஏதோ ஒரு பழிவாங்களுக்காக குர்ஆன்ன் மீது சுமத்தப்பட்ட அவதூறே தவிர வேறில்லை என்பதையே உணர்த்துகிறது.


முதலாவது கவனிக்க வேண்டிய விடயம் இந்த மீளாய்வுக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் 90% அகில இலங்கை ஜமீஜமீயதுல் உலமாவை சேர்ந்தவர்கள். 


இரண்டாவது விடயம், இந்தக் குர்ஆன் மொழிபெயர்ப்பானது, அல்பஹ்த் அச்சகம் அவர்களாக செய்த மொழி பெயர்ப்பு அல்ல. எந்த ஜமீயத்துல் உலமா இதை மொழிபெயர்த்து அல்பஹ்த் அச்சகத்திற்கு கொடுத்ததோ,

அதே ஜமீயத்துல் உலமாவின் உறுப்பினர்கள் தான் இதில் முற்போக்கு கருத்து ( අන්දවාද අදහස්   )உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிக்கையையும் வழங்கினார்கள்.


இதற்கு முந்தைய காலப் பகுதிகளிலும்முதலும், இதே மொழிபெயர்ப்பிலான அல்குர்ஆன் அல்பஹ்த் அச்சகத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. 


யார் இதை மொழிபெயர்த்து

அல்பஹ்த் அச்சகத்துக்கு வழங்கினார்களோ அதில் தவறு இருப்பின் அதை அல் அல் பஹ்த் அச்சகத்திற்கு திருத்தி வழங்கும் உரிமையும் அவர்களுக்கே உண்டு. அவ்வாறாயின் இதில் முற்போக்கு வாதம்  ( අන්දවාද අදහස්   ) உள்ளது என குறிப்பிடும் இவர்கள் இதை திருத்தாமல் இருப்பது ஏன் ?


எது எவ்வாறாக இருந்தாலும், சட்டம் என வரும்போது, உரிய அதிகாரத்தில் உள்ள தரப்பையும், அந்த அதிகார தரப்பினருக்கு உள்ள அதிகார வரையறைகளையும்  யாரும், எந்த அதிகாரியும் மீற முடியாது. 


ஆகவே குர்ஆன் மீளாய்வுக்காக அமைக்கப்பட்ட குழு, இக்குர்ஆன் பிரதிகளை வெளியிடுவதை அனுமதிக்கவில்லை. எனவே அந்த வரையறையை எவரும் மீறமுடியாது. நடந்த உண்மை இதுவே. 


அல்குர்ஆன் புனிதமானது அதில் முற்போக்குவாதம்  ( අන්දවාද අදහස්   )இல்லை என  அரசாங்கமும் அதிகாரிகளும் அறிந்து இருந்த நிலையிலும், மீளாய்வுக்குழுவின் அறிக்கையை அவர்கள் மீற முடியாது. இதுவே சட்டத்தின் வரையறை, ஒழுங்கு முறை. 


இதை அறிந்து இவ்வாறான ஒரு இறுக்கமான முடிச்சை இவர்கள் இட்டர்களா ? சந்தேகமாகவே உள்ளது.

இதற்கான தெளிவை அவர்களே வழங்க வேண்டும்.


எது எவ்வாறாயினும் அதில் உள்ளது அல்லாஹ்வின் வார்த்தைகள். அது புனிதமானது என்ற அடிப்படையில் பல சகோதரர்களும் பல வகைகளிலும் இதை விடுவிக்க முயற்சி செய்தார்கள். அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அதற்கான கூலியை கொடுப்பானாக.


யார் ? 

எந்த தரத்தில் உள்ளவர்கள் முயற்சி செய்த போதிலும், இதற்கு தடையாக அமைந்தது மீளாய்வுக் குழு வழங்கிய அறிக்கையாகும்.

எவராலும் அந்த அறிக்கையை மீறி போக முடியவில்லை.


இறுதியாக இது இரண்டு ஜனாதிபதிகளின் காலப்பகுதிகளுக்கு உட்பட்டும், அவ்வப்போதான காலப்பகுதி ஜனாதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதும் அங்கும் இந்த மீளாய்வுக் குழுவின் அறிக்கையே தடையாக இருந்தது.


மேலும் இறுதியாக நடைமுறையில் உள்ள ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு இவை சம்பந்தமாக ஆராயப்பட்டபோதும், இந்தக் குர்ஆன் பிரதியில் இதற்கான சகல பதிப்புரிமைகளும் அல்பஹ்த் பதிப்பகத்திற்கு மட்டுமே உண்டு, இதில் எந்த திருத்தங்களும் மேற்கொள்ளக்கூடாது என்பது அவர்களின் வரையறை. அவ்வாறான ஒரு நிலையில்

இதில் குறிப்புக்களை  இடுவதோ, திருத்தங்களை செய்வதோ முடியாத நிலையில் உள்ளது.


ஆகவே உள்நாட்டுக்குள் அவ்வாறு குறிப்புகள் இட்டு, பிரதிகள்  செய்து குர்ஆனை திருத்தப்படுமேயானால், குர்ஆனை திருத்தி எழுதிய  பழி இலங்கை நாட்டின் மீது சுமத்தப்பட்டு நாட்டிற்கு அது வேறு வகையிலான பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்ற கருத்தும் முன் எழுந்தது. உண்மையும் அதுவே.


ஆகவே இதற்கான இறுதித் தீர்வாக, எந்த நாட்டில் எந்த பதிப்பகத்தில் இந்த அல்குர்ஆன் அச்சிடப்பட்டதோ அதே பதிப்பகத்தில் இருந்து இதற்கான குறிப்புகள் அவர்களின் அனுமதியுடன் அச்சிட்டு வரவழைக்கப்பட்டு

விநியோகிக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. ஜனாதிபதியின் முடிவும் இதுவாகவே இருந்தது.


இதுவே இதற்கு சரியான தீர்வாக இருந்தாலும், நம் நாட்டின் பிரச்சனைக்கு ஏற்றவாறு, விளக்கங்களை விரிவுபடுத்தி அச்சிட்டு வழங்க இதை அச்சிட்ட அல்பஹ்த் அச்சகம் ஒருபோதும்  ஏற்றுக்கொள்ள மாட்டாது என்பதே உண்மை.


நிலைமை இவ்வாறு இருக்க, அண்மையில் நிருபர்கள் மாநாடு ஒன்றில் ஒரு முஸ்லிம் சகோதர நிருபர் ஒருவர் அமைச்சரிடம், 

" கடந்த மண்சரிவு வெள்ளங்களின்போது அதிகமான முஸ்லிம் வீடுகளில் குர்ஆன்பிரதிகள் அழிந்து விட்டது. ஒரு குர்ஆன் பிரதியை வாங்க 2500 முதல் 3000 வரை தேவைப்படுகின்றது. மக்கள் கஷ்டத்தில் இருக்கும் இந்நிலையில்,  இக்குர்ஆன் பிரதிகளை விடுவித்தால் மக்களுக்கு வழங்கலாமே"  என முன்வைத்த கேள்விக்கு, அரச தரப்பு பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ  அவர்கள் பதில் அளிக்கையில், அவர் கூறியதாவது, 

" குர்ஆனை தடுத்து வைக்க அரசுக்கு எந்த தேவையும் இல்லை. இது பரிசீலனைக்

குழு மற்றும்  பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட விடயமாகும். அவர்கள் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தால் இப்பிரச்சினை தீர்க்க முடியும்" என்ற கருத்துப்பட பதிலை வழங்கினார்.


அவ்வாறாயின்  பரிசீலனை குழு விட்ட பிழையை திருத்தி, இதை விடுவிக்க,  இதற்கான  மாற்று வழி என்ன ?


முதலாவது விடயம். பரிசீலனைக்குழு அல்லாஹ்வுக்கு பயந்து

தாம் செய்த பிழையை ஒப்புக்கொண்டு, இதை மீண்டும் மீழ் பரிசீலனை செய்து, தம் பிழையை ஒத்துக் கொண்டு சரியான முறையிலான அறிக்கை ஒன்றை மீண்டும் பாதுகாப்புத் துறைக்கு வழங்க வேண்டும்.


அல்லது பரிசீலனை குழுவில் உள்ளவர்கள் அனைவரும் ராஜினாமா செய்து, புதிய பரிசீலனை குழுவை அமைத்து. அவர்களுக்கு பழைய உறுப்பினர்கள் உறுதுணையாக இருந்து, அவர்கள் இதை மீழ்பரிசீலனை செய்து இதற்கான சரியான அறிக்கையை பாதுகாப்புத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். 


சட்ட வரையறைகளை தாண்டாமல், எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படாமல், இந்த குர்ஆன் பிரதிகளை விடுவிக்க உள்ள ஒரே ஒரு வழி இதுவாகும்.


இது விடயத்தில் முழுமூச்சாக ஈடுபட்டவன் என்ற வகையில்

இதை விடுவிக்க வேறு எந்த வழியுமே கிடையாது என்பதேடு,  இதுவே உண்மையுமாகும்.


எனவே இத்தனைக்கும் அல்லாஹ்விடம் பொறுப்புச் சொல்ல வேண்டியது  இந்த ஆய்வுக்குழுவின் உறுப்பினர்களின் பொறுப்பாகும். ஒருபோதும் அல்லாஹ்விடத்தில் இவர்கள் தப்பவே முடியாது.


எனவே அல்லாஹ்வின் தூய வார்த்தைகளுக்கு இவர்கள் இழைத்திருக்கும் அநீதிக்கு

இவர்கள் தாமாகவே இறங்கி வந்து,  தாம் செய்த பிழையை ஏற்றுக்கொண்டு, அல்லாஹ்வைப் பயந்து, தமது தராதரங்களை கருத்தில் கொள்ளாது, இதற்கான சரியான அறிக்கையை பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். 


அல்லது அவர்கள் இந்த விடயத்தில் இருந்து ராஜினாமா செய்து, புதிய உறுப்பினர்களை நியமித்து, இவர்களே அவர்களுக்கு உதவியாக இருந்து, சரியான அறிக்கையை தயாரித்து, பாதுகாப்புத் துறையிடம் அணுகி இதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்.


இதைத் தவிர இந்த சாபத்திலிருந்து இவர்கள் தப்பிக்க வழியே இல்லை.

இவர்கள் செய்தவற்றிற்கு இவர்களை பரிகாரம் தேட வேண்டும்.


இந்த செயல்பாடுகளின் பின்பும் குர்ஆன் சம்பந்தமான பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள், மாற்று மத மக்களுக்கான கருத்துக்களின் தெளிவின்மை போன்றவை ஏற்படுமாயின், அவ்வப்போது குர்ஆனை கற்ற உலமாக்கள் முன்வந்து அதற்கான விளக்கங்களை வழங்க முடியும். அவ்வாறான விளக்கங்கள் இலங்கையில் மட்டுமல் உலகளாவிய ரீதியில் காலத்துக்குக்  காலம் குர்ஆன் பற்றிய சில தெளிவின்மைகளால் பிரச்சனைகள் ஏற்பட்டு ஏற்கனவே இதற்கான விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளது. 


எனவே இவர்கள் தங்களது தராதரங்களை கருத்தில் கொள்ளாது, அல்லாஹ்வுக்கு பயந்து, இதற்கான ஒரு முடிவை இவர்களே காண வேண்டும்.


மறுபுறத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு மார்க்க ரீதியிலான வழிகாட்டி என தம்மை இனம் காட்டிக் கொண்டு, முக்கிய, மற்றும் அரச விடயங்கள் என  வரும்போது

முன் வரிசைகளில் அமர்ந்தும்,

பிரச்சினைகள் என வரும்போது பின்னோக்கி ஓடும் ஜமீய்யத்துல் உலமா

இந்த விடயத்தில் கண்டும் காணாமல் போல் இருப்பதின் அர்த்தம் என்ன ?


ஒவ்வொரு பொறுப்பாளர்களும் தங்கள் பொறுப்புகளுக்குரிய பதில்களை அளிக்கும் வரை மறுமையில் அவர்களின் கால்கள் நகராது.


இஸ்லாமிய சட்டங்களில் பண்டிதர்களாக இருக்கும் ஜமீயத்துல் உலமாவின் பொறுப்பாளர்கள் இப் பிரச்சினையை கண்டு கொள்ளாமல், அல்லாஹ்வின் மீது சிறிதும் அச்சமில்லாமல் தம் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மிகுந்த  கவலையுடன் நோக்க வேண்டியுள்ளது.


இக்குர்ஆன் விடயத்தில் இது எங்களுக்குரிய பொறுப்பு அல்ல, இது எங்களுக்குரிய விடயம் அல்ல, இது கலாச்சாரத் திணைக்களத்தின் பொறுப்பு என கூறும் இவர்களின் தார்மீகப் பொறுப்பு என்ன என்பதை இவர்கள் அறியவில்லையா ? 

அல்லது அறியாமல் நடிக்கின்றார்களா ?


அல்லாஹ்வின் வேத வாக்கை தாங்கிய அருள் மறைகள்  தவித்துக் கொண்டிருக்கும் நிலையில்,

ஆன்மீகத்தில் பண்டிதர்களாக இருக்கும் இவர்கள் எவ்வாறு உறங்குகின்றார்கள் என்பது பெரிய ஆச்சரியமாக உள்ளது.


எனவே இரண்டு வருடங்களை அண்மித்த நிலையில் இருக்கும் புனிதமிக்க  இக்குர்ஆன் பிரதிகள், இதன் இயற்கை நிலையில் மாற்றமடைந்து,

உருக்குலைந்து, மக்களின் பாவணைக்கு பிரயோசனமற்ற நிலையை அடைந்து, சாபத்துக்குள்ளாக முன் இது சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாக இதற்காக செயல்பட்டு தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.


( பேருவளை ஹில்மி )

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »