Our Feeds


Monday, February 9, 2026

Zameera

மோசமான வானிலை காரணமாக மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைப்பு


 மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள், நிலவும் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். குழு மீண்டும் கூடியவுடன் அதன் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது விரைவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்


அமைச்சரின் கூற்றுப்படி, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.


அத்துடன், மாகாண சபைத் தேர்தல்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து கட்டம் கட்டமாக நடத்துவதற்கு அரசாங்கம் எவ்வித தயார்நிலையிலும் இல்லை என்றும், அனைத்து நடவடிக்கைகளும் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



இதேவேளை, நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பின் கீழ் தேர்தலை நடத்துவதாயின், தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை அங்கீகரிக்கப்படுவது கட்டாயமானது என ‘பெபரல்’ (PAFFREL) அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.



50% தொகுதி அடிப்படையிலும், 50% மேலதிகப் பட்டியலிலிருந்தும் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் புதிய முறையை நடைமுறைப்படுத்துவதாயின், எல்லை நிர்ணய பணிகள் நிறைவடைய வேண்டும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.



இந்தச் செயன்முறைகள் காரணமாக தேர்தல் ஜூன் அல்லது ஜூலை மாதம் வரை ஒத்திவைக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


நாட்டிலுள்ள அனைத்து மாகாண சபைகளினதும் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்து தற்போது பல வருடங்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »