Our Feeds


Monday, February 9, 2026

Zameera

கல்வித் துறையில் தற்போது நாளுக்கு நாள் நெருக்கடியான சூழ்நிலை உருவெடுத்து வருகின்றன


 கல்வித் துறையில் தற்போது நாளுக்கு நாள் நெருக்கடியான சூழ்நிலை உருவெடுத்து வருகின்றன. 


கல்வித் துறையில் மனிதவள முகாமைத்துவம் தொடர்பாக கடந்த காலங்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கல்வித் துறையில் மனிதவளத்தை ஏமாற்றமடையச் செய்யும் கொள்கை முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. 


ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் விவகாரத்தில் அரசாங்கம் நடந்து கொண்ட விதம் போலவே இந்த விவகாரத்திலும் அரசாங்கம் நடந்து வருகின்றது. 


அதிபர் சேவையின் 3 ஆம் தரத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை 2019 இல் நடைபெற்றது. முதல் சுற்றில் 1858 பேரும், இரண்டாவது சுற்றில் 4800 பேரும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 


இருப்பினும், மேலும் 1216 பேர் தங்கள் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதிபர் சேவையில் சேரத் தயாராக உள்ளனர். ஆனால் தற்போதைய அரசாங்கம் இவர்களை நியமிக்காமல் புதிய போட்டிப் பரீட்சையை நடத்தி அவர்களை ஆட்சேர்ப்பு செய்யவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


3 ஆம் தர அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து இன்னும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படாத தரப்பினரை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார். 


அரசாங்கத்திடம் திறமையான மற்றும் முறையான திட்டமொன்று இல்லாததன் காரணமாக, கல்வித் துறையில் பாரிய சரிவு ஏற்பட்டுக் கொண்டு வருகின்றன. 


கல்வி அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை கல்வியை ஆபாசமயப்படுத்தியதால் கல்விச் சீர்திருத்தங்கள் நாசமடைந்து போயுள்ளன. பிரதமர் ஒன்றைச் சொல்கிறார், ஜனாதிபதி வேறொன்றைச் சொல்கிறார். இவ்வாறு இருவரும் முரணான கருத்துக்களைச் சொல்லி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். 


ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்துக்களால், கல்வித் துறையில் பிள்ளைகளும் மனித வளங்களுமே பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. 


கல்வித் துறைக்கு ஏற்கனவே ஏற்பட்டுள்ள பாதிப்பு கடுமையானது என்பதால், மேலும் இங்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது, அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் ஏலவே சித்தி பெற்றவர்களை இணைத்துக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »