நாட்டின் தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தரவுகள் காட்டுகின்றன.
இதன்படி, இன்று (21) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 366,300 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை,24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை இன்று 396,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
