இந்தியாவை ஒரு நம்பிக்கைக்குரிய நண்பராகவும், பங்குதாரராகவும் தான் கருதுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ட்ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகமொன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக, சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா தொடர்பான தனது கட்சியின் பழைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் ட்ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக, மக்கள் விடுதலை முன்னணியின், கட்சியின் ஆரம்ப காலத்தில் 'இந்திய விரிவாக்கக் கொள்கை' (Indian Expansionism) குறித்து ரோஹண விஜேவீர கொண்டிருந்த கடுமையான கருத்துக்கள், ட்ரில்வின் சில்வாவின் இந்தியப் பயணத்துக்குப் பின்னர், மாறியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
