Our Feeds


Friday, March 27, 2026

SHAHNI RAMEES

38,000 மெட்ரிக் தொன் பெட்ரோல், டீசலுடன் நாளை இலங்கை வரும் கப்பல்!


இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, இந்தியா இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை அனுப்ப தீர்மானித்துள்ளது.இலங்கை செய்திகள்


இந்த எரிபொருள் கப்பலில் 20,000 மெட்ரிக் தொன் டீசலும், 18,000 மெட்ரிக் தொன் பெற்றோலும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இக்கப்பல் மார்ச் 28ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.


இலங்கையில் நிலவும் எரிசக்தி தேவைகளை சமாளிக்கவும், பொருளாதார நிலைமையை சீராக்கவும் இந்த உதவி முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும் வகையில் இந்த நடவடிக்கை அமையும் என்றும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.


இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு உறுதுணையாக அமைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »