Our Feeds


Thursday, March 26, 2026

Zameera

மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருள் போதுமானது – சிபட்கோ


 எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதி வரை மின்சார உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையிடம் உள்ள எரிபொருள் அளவு, நாட்டின் உண்மையான தேவையை விட சுமார் 10% அதிகமாகவே உள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை என்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால், அது கையிருப்பு இல்லாததால் அல்ல.

மாறாக பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைச் சேமித்து வைப்பதாலும், விநியோகத் தற்காலிகத் தடைகளாலுமே ஏற்படும்

அத்தியாவசியத் தேவைக்கு மேலதிகமாக எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »