Our Feeds


Monday, March 16, 2026

Zameera

ஈரான் ஒருபோதும் போர்நிறுத்தத்தையோ அல்லது பேச்சுவார்த்தையையோ கோரவில்லை


 ஈரான் ஒருபோதும் போர்நிறுத்தத்தையோ அல்லது பேச்சுவார்த்தையையோ கோரவில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். 


ஈரான் ஒரு உடன்படிக்கையை விரும்புவதாகவும், ஆனால் அதற்கான நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லை என்பதால் அதற்குத் தாம் இணங்கவில்லை என டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார். 


அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஈரான் வெளிவிவகார அமைச்சர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார். 


அமெரிக்கர்களுடன் நாம் பேசுவதற்கு எந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. 


ஏனெனில், அவர்களுடன் நாம் பேசிக்கொண்டிருந்த போதே அவர்கள் எங்களைத் தாக்க முடிவு செய்தார்கள். 


இது ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவினால் விரும்பித் திணிக்கப்பட்ட ஒரு போர். 


எமது தற்காப்பு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »