Our Feeds


Tuesday, March 3, 2026

Sri Lanka

அரம்கோவை தொடர்ந்து, சவுதி தலைநகர் ரியாதில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தையும் தாக்கிய ஈரான்!

 



ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேலிய தாக்குதலுக்கு

பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க நிலைகளை சரமாறியாக தாக்கி வருகிறது. 


இந்நிலையில் நேற்றைய தினம் சவுதி அரேபியாவில் அமைந்துள்ள அமெரிக்க - சவுதி பெற்றோலிய உற்பத்தி தளமான அரம்கோவை தாக்கிய பின்னர். சவுதி தலைநகர் ரியாதில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தையும் ஈரான் தாக்கியது. 


ஈரான் பதிலடி அமெரிக்கா நினைத்ததை விட பல மடங்கு வேகமாகவும், அதிகமாகவும் இருப்பதை அவதானிக்க முடிவதாக யுத்தம் பற்றிய ஆய்வாளர்கள் அதிர்ச்சி வெளியிடுகிறார்கள். 


இந்நிலையில் ரியாத் தூதரகம் மீதான தாக்குதல் தொடர்பில் அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


ரியாத் தூதரகம் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் பதில் விரைவில் வரும் என்று டிரம்ப் கூறுகிறார்: அறிக்கை


ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலுக்கு என்ன பதில் இருக்கும் என்பதை "நீங்கள் மிக விரைவில் கண்டுபிடிப்பீர்கள்" என்று நியூஸ் நேஷனின் பத்திரிகையாளர் கெல்லி மேயர் கூறுகிறார்.


அமெரிக்க தரைப்படைகளை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பைப் பற்றி தான் பயப்படவில்லை என்று கூறிய ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான போரில் தரைப்படையை பயன்படுத்த வேண்டியதில்லை என்று மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »