புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, கொழும்பு மாநகர சபையினால் (CMC) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி, கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் மிகச் சிறப்பாக (2026/03/17) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கொழும்பு மாநகர முதல்வர் (Mayor), பிரதி முதல்வர் (Deputy Mayor) மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்துகொண்டனர்.
மத நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் வலியுறுத்தும் வகையில் இந்த இப்தார் சந்திப்பு அமைந்திருந்தது.
கொழும்பு மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்களின் ஒன்றியம் (CMC Muslim. Member Forum) இந்த நிகழ்ச்சியினை மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பல்வேறு மதத் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தகவல் - கலீலிர் ரஹ்மான்
