Our Feeds


Monday, March 2, 2026

SHAHNI RAMEES

இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்!

 

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை(ஐ.ஆர்.ஜி.சி.) தெரிவித்துள்ளது. அதே போல், இஸ்ரேல் விமானப்படை தளபதியின் இருப்பிடம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதல்கள் கெய்பர் ஷேகான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும் ஐ.ஆர்.ஜி.சி. குறிப்பிட்டுள்ளது.

ஆனால், தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவரது அலுவலகத்தில் இருந்தாரா? என்ற விவரம் தெரியவில்லை. இதனால் நெதன்யாகுவின் நிலை என்ன? அவர் உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »