Our Feeds


Thursday, March 19, 2026

Zameera

கடன் செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை – தயாசிறி


 இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கடன்களை மறுசீரமைப்பதன் மூலம், கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை 2029 ஆம் ஆண்டிற்கு அப்பால் நீடிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடன்களை செலுத்துவதற்காக ஒவ்வொரு லீற்றர் எரிபொருளிலிருந்தும் 50 ரூபாய் அறவிடப்படுகிறது. 

கூட்டுத்தாபனத்தின் கடன்கள் மறுசீரமைக்கப்பட்டால், இந்த வரி அறவீட்டைத் தற்காலிகமாகத் தளர்த்த முடியும்.

எரிபொருள் விலையினால் மக்கள் எதிர்நோக்கும் சுமையைக் குறைக்க வேண்டுமானால், கடன் மீள் செலுத்தும் காலத்தை நீடிக்க வேண்டும்.

இதன்மூலம் தற்போதைய வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்க முடியும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »