ஈரானின் அதி உயர் தேசிய பாதுகாப்புச் சபையின்
புதிய செயலாளராக மொஹமட் பாகர் சொல்காதர் (Mohammad Bagher Zolghadr) நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தை மேற்கோள் காட்டி ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி வௌியிட்டுள்ளது.இஸ்ரேல் - அமெரிக்க கூட்டு தாக்குதலில் ஈரானின் அதி உயர் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளராக செயற்பட்ட அலி லரிஜானி கடந்த வாரம் கொல்லப்பட்டார்.
அவருக்கு பதிலாகவே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
