Our Feeds


Sunday, March 15, 2026

Sri Lanka

இலங்கைக்கான மலேஷிய தூதரின் வருகையுடன், கலாநிதி ஜனகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற IDMNC கல்வியகத்தின் இப்தார் நிகழ்வு | Photos



IDMNC உயர்கல்வி சர்வதேச நிறுவனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று (14) வெள்ளவத்தை மெரின் கிராண்ட் ஹோட்டலில் அந்த நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி வி.ஜனகன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் அதிதிகளாக மலேசியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பாத்லி ஹிஷாம் பின் ஆதம் மற்றும் இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் இடைக்கால தலைவரும், சவுதி அரேபியாவின் ஜித்தாவிற்கான கவுன்சில் ஜெனரலுமான நீதிபதி முகம்மட் தாஹிர் லபார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


அதேவேளை சிரேஷ்ட சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.













Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »