Our Feeds


Friday, March 20, 2026

Zameera

IMF குழு 26ஆம் திகதி இலங்கை வருகை


 சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜூலி கோசாக் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொள்கை ரீதியான கலந்துரையாடல்களுக்காக இலங்கை வரவுள்ள அந்த குழு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் 5வது மற்றும் 6வது மீளாய்வுகளை ஒன்றிணைத்து நிறைவு செய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாக அமைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »