தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துவார்களாயின், கிவ்.ஆர் முறைமை அவசியப்படாது என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க (Chathuranga Abeysinghe) தெரிவித்துள்ளார்.
இன்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த எரிபொருள் நெருக்கடியானது இலங்கைக்கு மாத்திரம் மட்டுமன்றி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பொதுமக்களை முடிந்தவரை எரிபொருள் நுகர்வைக் குறைத்துக்கொள்ளுமாறு பிரதி அமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
