Our Feeds


Thursday, April 16, 2026

SHAHNI RAMEES

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம்!

 



லெபனானும் இஸ்ரேலும் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு

உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 


வெளிநாட்டு ஊடகங்களின் அறிக்கைகளின்படி, இந்த போர்நிறுத்தம் (EST) மாலை 17:00 மணிக்கு (22:00 BST) ஆரம்பமாகவுள்ளது. 


இந்தத் தீர்மானத்தின் மூலம் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் தற்காலிகமாகத் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் இரு தரப்பினரும் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு உடன்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.


🔴இன்று இரவு 21:00 GMT மணிக்கு லெபனானில் போர் நிறுத்தம் தொடங்கும் என டிரம்ப் அறிவித்தார்.


📌"லெபனானின் மிகவும் மதிக்கப்படும் அதிபர் ஜோசப் அவுன் மற்றும் இஸ்ரேலின் பிரதமர்நெதன்யாகு ஆகியோருடன் நான் மிகச் சிறந்த உரையாடல்களை மேற்கொண்டேன்," 


📌இந்த இரு தலைவர்களும் இன்று மாலை 5 மணிக்கு (EST) 10 நாள் போர் நிறுத்தத்தை முறையாகத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளனர்,"


📌உலகெங்கிலும் 9 போர்களைத் தீர்த்து வைத்தது எனது பெருமைக்குரிய செயலாகும், இது எனது பத்தாவது போராக இருக்கும்.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »