சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தாங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் வழங்கியுள்ள இணக்கப்பாடு தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனை தெரிவித்துள்ளது.
இதன்போது, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் வகை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட கப்பல் நாட்டை வந்தடையும் திகதி தொடர்பிலும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
