Our Feeds


Monday, April 6, 2026

Zameera

ஈரான் தலைநகரில் குடியிருப்புக் கட்டடத்தின் மீது வான்வழித் தாக்குதல்


 ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள குடியிருப்புக் கட்டடமொன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 

தெஹ்ரானின் தென்மேற்கு பகுதியில் கட்டடத்தில் இன்று திங்கட்கிழமை (6) அதிகாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

மேலும் தலைநகரில் உள்ள ஷெரீஃப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கட்டடங்கள் மற்றும் அதன் வளாகத்துக்கு அருகில் உள்ள இயற்கை எரிவாயு விநியோகத் தளம் ஆகியவற்றின் மீதும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகமான ஃபார்ஸ் குறிப்பிட்டுள்ளது. 

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை இஸ்ரேலோ அமெரிக்காவோ பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது. 

தற்போது போர் இடம்பெற்று வருவதால் மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் எதை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பாக விசாரணைகள் தொடர்கின்றன.

மேலும், தெஹ்ரானுக்கு தெற்கில் உள்ள கோம் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியிலும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் நாளிதழொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »