Our Feeds


Tuesday, April 7, 2026

Zameera

ஹோமாகமயில் இரு பகுதிகளுக்கு இன்று நீர் விநியோகத் தடை


 வறண்ட வானிலை காரணமாக ஹோமாகமயில் இரு பகுதிகளுக்கு இன்று (07) நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

குறித்த நீர் விநியோகத் தடையானது 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை சுமார் 12 மணித்தியாலம் நீடிக்கும் எனவும் சபை தெரிவித்துள்ளது.

ஹோமாகம நகரம், வேகந்த, பிங்கெத்த வீதி,வலவ்வ வீதி, கெமுனு மாவத்த, அத்துருகிரிய வீதி, கலவில வத்த, நியந்தகல, மகம்மன, மகாக்கட்டுவன, தெனியா மற்றும் தியகம பல்கலைக்கழக பகுதிகளுக்கே நீர் விநியோகம் நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »