டெஹ்ரானில் இருந்து வணிக ரீதியான விமான சேவைகளை 2 மாதங்கள் கழித்து ஈரான் இன்று (25) தொடங்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து, ஈரான் மீது தாக்குதல்களை நடத்தின. போர் தீவிரம் அடைந்ததால் ஈரான் வான்வழிப்பாதைகள் முழுவதும் முடங்கின.
ஈரானுக்கு யாரும் பயணம் செய்யாதீர்கள். இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
தற்போது போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், ஈரானுக்கும் உலக நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச விமான போக்குவரத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.
இந் நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து வணிக ரீதியான விமான சேவைகள் இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளன. இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல், மஸ்கட் மற்றும் மதீனாவுக்கு விமானங்கள் புறப்பட்டுச் சென்றன. இஸ்தான்புல்லுக்கு குறைந்தது 3 விமானங்கள் இயக்கப்பட்டன.
முன்னதாக பதற்றமான சூழல் தொடர்வதால் இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு பயணிக்க வேண்டாம் என்று டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்து இருந்தது, குறிப்பிடத்தக்கது.
