ஈரான் உடனான ஒப்பந்தம் இன்றைய தினம் பாகிஸ்தானில் வைத்து கையெழுத்திடப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வைத்து குறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகவுள்ளதாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
மறுபுறம், அமெரிக்காவின் "யதார்த்தமற்ற கோரிக்கைகள்" மற்றும் கடற்படை முற்றுகையைச் சுட்டிக்காட்டி, இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகளை ஈரான் புறக்கணிப்பதாக ஈரானிய அரச ஊடகமான IRNA செய்தி வெளியிட்டிருந்தது.
எவ்வாறாயினும், இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பது குறித்து ஈரான் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான சமிக்ஞைகளும் அல்லது உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
