Our Feeds


Saturday, April 11, 2026

Zameera

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா விரைவில் திறக்கும் - ட்ரம்ப்


“ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா விரைவில் திறக்கும். ஆனால், இதுவொரு எளிதான நடவடிக்கை அல்ல” என அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நேற்று (10) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந் நடவடிக்கைக்கு மற்ற நாடுகளும் உதவுவதற்கு முன்வந்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற நாடுகள் இந்த நீரிணையை பயன்படுத்துகின்றன. எனவே அவை உதவ முன்வந்துள்ளன. இது எளிதாக இருக்காது. ஆனாலும் நான் இதைச் சொல்கிறேன் இதை விரைவில் திறப்போம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

போர் தொடங்கியிதிலிருந்து ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது. இது உலகளாவிய ரீதியில் எரிசக்தி விநியோகத்துக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணையை விரைவில் திறப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »