Our Feeds


Wednesday, April 29, 2026

Zameera

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால தலைவர் நியமனம்


 ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு துறை அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்க் குழு உறுப்பினர்கள் விலகியிருந்தனர்.

இதனையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இடைக்கால தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக் குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதன்படி, இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ரொஷான் மஹநாம, குமார் சங்கக்கார மற்றும் துசிர ரதெல்ல, சிதத் வெத்தமுனி, அவந்தி கொலம்பகே, பிரகாஷ் ஷாப்டர், உபுல் குமாரப்பெரும , தினால் பிலிப்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »