Our Feeds


Friday, April 24, 2026

Zameera

பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்


 இன்று (24) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


தென் மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »