Our Feeds


Wednesday, April 22, 2026

SHAHNI RAMEES

ஈரான் - அமெரிக்க யுத்த நிறுத்தத்தை பாகிஸ்தானின் கோரிக்கைக்கு இணங்க நீட்டிப்பதாக ட்ரம்ப் அறிவிப்பு!

 

பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க இரானுடனான போர் நிறுத்தத்தை அமெரிக்கா நீட்டிப்பதாக கூறியுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானிய துறைமுகங்களில் முற்றுகை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், "இரான் அரசாங்கம் எதிர்பாராத வகையில் மிகத் தீவிரமாகப் பிளவுபட்டுள்ளது என்ற உண்மையின் அடிப்படையிலும், பாகிஸ்தானின் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோரின் கோரிக்கையின் பேரிலும், இரான் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை முன்வைக்கும் வரையில், அந்நாட்டின் மீதான எங்களது தாக்குதலை நிறுத்திவைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளோம்.

எனவே, நமது ராணுவம் முற்றுகையைத் தொடரவும், மற்ற அனைத்து அம்சங்களிலும் தயார் நிலையிலும் திறனுடனும் இருக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். அத்துடன், அவர்களின் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் எவ்வகையிலாயினும் நிறைவடையும் வரையில், நான் போர்நிறுத்தத்தை நீட்டிக்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »