தெற்கு லெபனானின் மன்சூரி நகரில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலிலே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் தெற்கு லெபனானின் சில பகுதிகளில் ஊடுருவலைத் தொடங்கியுள்ளதுடன், அந்நாட்டில் தொடர்ந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
நேற்று இரவு தெற்கு பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
