Our Feeds


Wednesday, April 1, 2026

Zameera

தேங்காய் எண்ணெய் கலப்படம் – 5 வியாபார நிலையங்களுக்கு எதிராக வழக்கு


 கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் கலப்படத்தில் ஈடுபட்ட வியாபார நிலையங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.


கல்முனை பிரதேசத்தில் மூன்று வியாபார நிலையங்களிலும் சாய்ந்தமருதில் இரண்டு வியாபார நிறுவனங்களிலும் இவ்வாறு கலப்படம் மேற்கொள்ளப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.


இவற்றுக்கு எதிராக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை வியாழக்கிழமை (02) கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர் இஸட்எம். ஸாஜித் தெரிவித்தார்.


-அஸ்லம் எஸ்.மௌலானா

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »