ஈரான் - அமெரிக்கா போரால் காண்டம்
உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 860 மில்லியன் டாலர் புழங்கும் துறையாக காண்டம் உற்பத்தி தொழில்கள் உள்ளன.ஈரான் போர் காரணமாக பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் லூப்ரிகண்ட்ஸ் விநியோகம் பாதிப்பட்டுள்ளது. இது காண்டம் தயாரிக்க பயன்படும் முக்கியமான மூலக்கூறுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 400 கோடி காண்டம்கள் தயாரிக்கும் துறையாக இது உள்ள நிலையில் மூலப்பொருள் பற்றாக்குறையால் உற்பத்தி செலவு அதிகரிக்க உள்ளது. காண்டம் உற்பத்தி இரண்டு முக்கிய மூலப்பொருட்களான சிலிகான் எண்ணெய் மற்றும் அமோனியாவை அதிகமாக சார்ந்துள்ளது.
காண்டம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்தால் சமூகத்தில் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
