Our Feeds


Monday, April 20, 2026

Zameera

அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறி செல்ல முற்பட்ட ஈரானிய சரக்கு கப்பலை சிறைபிடித்துள்ளோம் - ட்ரம்ப்


ஈரான் - அமெரிக்காவுக்கிடையிலான தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், இன்று பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 

இப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்கா குழு புறப்படும் என்று ட்ரம்ப் கூறியிருக்கும் நிலையில், ஈரான் இதில் பங்கேற்குமா என்பது உறுதியாகவில்லை.

இந்நிலையில் ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது.

இவ்வாறிருக்க, அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறி செல்ல முற்பட்ட ஈரானிய சரக்கு கப்பலை சிறைபிடித்துள்ளோம் என ட்ரம்ப் கூறியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »