கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணி இன்று (09) ஆரம்பிக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கோட்டை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நவீனமயமாக்கல் பணிக்கான மதிப்பிடப்பட்ட செலவு 2.1 பில்லியனுக்கும் அதிகமாகும்.
மேலும், இப்பணி 15 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
