ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர்
ஷம்மி சில்வா உள்ளிட்ட ஒட்டுமொத்த செயற்குழு உறுப்பினர்களும் தமது பதவிகளில் இருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.இன்று நடைபெற்ற விசேட செயற்குழு கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சபையின் தலைவர் ஷம்மி சில்வா உட்பட செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கூட்டாகப் பதவி விலகுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் மற்றும் மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்தத் திடீர் பதவி விலகல் தீர்மானத்தைத் தொடர்ந்து,ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அடுத்தகட்ட நிருவாகக் கட்டமைப்பு எவ்வாறு அமையும் என்பது குறித்து விளையாட்டுத்துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
