Our Feeds


Thursday, April 2, 2026

Zameera

பஹ்ரைனில் உள்ள அமேசானின் கம்ப்யூட்டிங் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது


 பஹ்ரைனில் உள்ள அமேசானின் கிளவுட் கம்ப்யூட்டிங் செயல்பாடு மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த செய்தியை ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்தும் நிறுவன வளாகத்தில் ஏற்பட்ட தீயை பொது பாதுகாப்பு குழுக்கள் அணைத்து வருவதாக பஹ்ரைனின் உள்துறை அமைச்சு முன்னதாக தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட நிறுவனம், உயிரிழப்புகள் அல்லது சேதத்தின் அளவு குறித்த விபரங்களை அமைச்சிற்கு உடனடியாக வழங்கவில்லை.

ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள மைக்ரோசாஃப்ட், கூகுள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களைத் தாக்கப்போவதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் அச்சுறுத்திய ஒரு நாள் கழித்து இந்தத் தாக்குதல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »