இது NPPயின் #ஹெல்பிங் #ஹம்பந்தோட்டையா...?
NPP அரசின் "இலங்கையை மீள்-கட்டி எழுப்பல்" (Rebuilding SriLanka) என்ற குழுவுக்கு, தித்வா பேரிடர் நிவாரணத்துக்காக, வெளிநாட்டு, உள்ளூர் நன்கொடையாக கிடைத்த சுமார் ரூ. 1,000 கோடி தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் விபரங்கள் இல்லை என, செயலகம், RTI என்ற தகவல் அறியும் கோரிக்கைக்கு பதில் கூறி உள்ளது.
ரெஹான் ஜயவிக்ரம, ஃபராஸ் அலி இருவரும் வெளி கொண்டு வந்துள்ள இந்த அதிர்ச்சி தகவல்படி, வெளிநாட்டு நன்கொடை அமெ டொலர் 11.4மி, உள்ளூர் நன்கொடை ரூ. 617 கோடி, மொத்தம் ரூ. 1,000 கோடி, என ஜனாதிபதி செயலகம் ஏற்று கொண்டுள்ளது.
ஆனால், நிதி எங்கே, எப்போது, எதற்கு, பயன் படுத்த பட்டது என்ற விபரங்கள் இல்லையாம்.
ஆகவே, இவர்கள் எழுப்பும் கேள்வி நியாயமானதே!
"இந்த முறை திரைக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? ஹெக்கர்களா, இல்லை, தேவதைகளா?"
(இந்த Rebuilding SriLanka Committeeக்கு நியமிக்க பட்ட கனவான்கள் யார், யாரென, ஆர்வம் உள்ளோர் தேடி பாருங்க!)
