Our Feeds


Tuesday, May 26, 2026

Zameera

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்


 தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர உத்தரவிட்டுள்ளார். 


குறித்த பிக்குகள் இன்று (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இணையவழி முறைமையூடாக முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »