Our Feeds


Tuesday, May 5, 2026

Zameera

ஈரானின் 7 அதிவேகப் படகுகளை நாங்கள் அழித்துவிட்டோம் - ட்ரம்ப் எச்சரிக்கை


 ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் 07 அதிவேக படகுகளை அமெரிக்க படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், “ஈரானின் 7 அதிவேகப் படகுகளை நாங்கள் அழித்துவிட்டோம். ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுமார் 2000 கப்பல்கள் மற்றும் 20,000 மாலுமிகள் சிக்கித் தவிக்கின்றனர். இவர்களை மீட்க அமெரிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்தான் இந்த புரொஜெக்ட் ஃப்ரீடம்.

இந்த மீட்பு நடவடிக்கைக்கு யாராவது தடையோ அல்லது இடையூறோ விளைவித்தால் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »