Our Feeds


Friday, May 1, 2026

Sri Lanka

கருப்பு கொடி ஏற்றி தொழிலாளர் 'மே' தினத்தை எதிர்த்த - "நீலகாமம்" மக்கள்.



இன்று இலங்கை முழுவதும் “மே” தினம் அனுஷ்டிக்கப்பட்டது. ஆனால் நீலகாமம் பகுதியில் கருப்பு கொடி பறக்கவிடப்பட்டு, தமது எதிர்ப்பை அந்த பிரதேச மக்கள் வெளிப்படுத்தி இருந்தனர். 


தாம் தொழில் புரியும் தோட்ட கம்பனி, தம் மீதே குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்தியமையானது, தமக்கான தொழில் உரிமையையும் பாதுகாப்பையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.


நீலகாமம் பெருந்தோட்ட பகுதியில் இன்றும் குண்டர்களின் நடமாட்டம் உள்ளது. இதனால், தொழிலாளர் தினம் தமக்கு இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் காவத்தை - நீலகாமம் பகுதியில் இன்று (01) கருப்பு கொடி பறக்கவிடப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »