பெலாரஸ் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் மாக்சிம் ரிஜென்கோவ் விடுத்த அழைப்பின் பேரில் இன்று (12) முதல் 2026 மே 15 வரை பெலாரஸிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மேற்கொள்ளவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த விஜயம் இருதரப்பு உறவுகளில் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
