Our Feeds


Saturday, May 30, 2026

Zameera

இந்து சமுத்திரப்பிராந்தியத்தை அமைதி வலயமாகப் பேணுவது அவசியம்


 (நா.தனுஜா)


இந்து சமுத்திரப்பிராந்தியத்தை அமைதி வலயமாகவும், ஒத்துழைப்பு மற்றும் சுபீட்சத்தைக்கொண்ட பிராந்தியமாகவும் பேணவேண்டும் என பாதுகாப்புச்செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா அழைப்புவிடுத்துள்ளார்.


ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகளின் 14 ஆவது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாதுகாப்புச்செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அங்கு கருத்துரைத்த அவர், இந்து சமுத்திரப்பிராந்தியத்தை அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட சுபீட்சம் ஆகியவற்றைக்கொண்ட ஒரு பிராந்தியமாகப் பேணுவது மிக அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.


அதேபோன்று தற்போதைய சிக்கலான புவிசார் அரசியல் சூழ்நிலையில், தீவிரமடைந்துவரும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.Politics

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »