Our Feeds

Wednesday, May 13, 2026

Zameera

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

 சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் சுனில் சாந்தவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  தீர்மானித்துள்ளது.

எதிர்கால நிர்வாக நடவடிக்கைகளுக்காக புதிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவர் இந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் சுனில் சாந்தவிடம் 'அத தெரண' வினவியது. அதற்குப் பதிலளித்த அவர், இந்த நீக்கம் குறித்து தனக்கு இதுவரை எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் சுனில் சாந்தவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தீர்மானித்துள்ளது.

எதிர்கால நிர்வாக நடவடிக்கைகளுக்காக புதிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவர் இந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக சபரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் சுனில் சாந்தவிடம் 'அட தெரண' வினவியது. அதற்குப் பதிலளித்த அவர், இந்த நீக்கம் குறித்து தனக்கு இதுவரை எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »