Our Feeds


Saturday, May 16, 2026

SHAHNI RAMEES

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது! - அமைச்சர்

 



வாகன இறக்குமதிக்கான தீர்வைக் கட்டணம்

தற்காலிகமாக மூன்று மாத காலத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் வாழ்வாதாரத் தொழில் வாகனங்களுக்கு இந்த வரி அதிகரிப்பு எவ்வகையிலும் பொருந்தாது என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 


சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் வதந்திகளால் டொலரின் பெறுமதிக்கு ஏற்படும் கூடுதல் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்குத் தேவையான டொலர் இருப்புகளைப் பாதுகாப்பதற்காகவுமே தனிப்பட்ட பயன்பாட்டுக்கான வாகன இறக்குமதிக்கான தீர்வைக் கட்டணம் தற்காலிகமாக மூன்று மாத காலத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »