Our Feeds


Saturday, May 16, 2026

SHAHNI RAMEES

விபத்து நடந்த ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியவர் கைது!

 


இன்று (16) காலை ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில்,

ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


பேலியகொட பொலிஸாரினால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இவர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


தண்டவாளத்தில் கழற்றப்பட்ட ஆணிகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சென்ற நபர் இவரே என்பது பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »